ஆலங்குளம் அருகே நள்ளிரவில் வீடு புகுந்து மூதாட்டியிடம் நகை பறித்துச் சென்ற கொள்ளையனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
ஆலங்குளம் அருகேயுள்ள நெட்டூர் சாலைத் தெருவைச் சேர்ந்தவர் சுப்பையா மனைவி பாப்பா(80). கணவனை இழந்த அவர் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இவரது மகன்கள் அருகேயுள்ள வீடுகளில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தாராம்.
இரவு 2 மணி அளவில் மர்ம நபர் ஒருவர் வீட்டு ஓட்டைப் பிரித்து ஏணி வழியாக இறங்கி தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியின் கழுத்தில் அணிந்திருந்த சுமார் 32 கிராம் எடையுள்ள தங்கச் சங்கிலியை பறித்து, கை விரலில் அணிந்திருந்த மோதிரத்தை கழட்ட முயன்ற போது மூதாட்டி கண் விழித்து விட்டாராம்.
அவர் கூச்சலிடவே, திருடன் சங்கிலியை மட்டும் எடுத்துக் கொண்டு வீட்டுக் கதவைத் திறந்து தப்பியோடி விட்டாராம். புகாரின் பேரில் ஆலங்குளம் காவல்துறையினர் வழக்குப் பதிந்து திருடனைத் தேடி வருகின்றனர். கை ரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு மாதிரியை சேகரித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கார்த்திகை தீபம் தொடரில் பாண்டவர் இல்லம் நடிகை!

வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

ஹலோகிராமில் விஜய் உருவம்... தவெக வேட்பாளர் நூதன பிரசாரம்!

100% வாக்குப் பதிவு: கோவையில் இந்திய துணை தேர்தல் ஆணையர் ஆய்வுக் கூட்டம்
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


