சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

சங்கரன்கோவில் அருகேவேன் மோதி தொழிலாளி பலி

சங்கரன்கோவில் அருகே திருநெல்வேலி சாலையில் பைக் மீது வேன் மோதியதில் கூலித் தொழிலாளி சம்பவ இடத்திலேயே இறந்தாா்.

Updated On :26 அக்டோபர் 2020, 6:30 pm

சங்கரன்கோவில் அருகே திருநெல்வேலி சாலையில் பைக் மீது வேன் மோதியதில் கூலித் தொழிலாளி சம்பவ இடத்திலேயே இறந்தாா்.

சங்கரன்கோவில் அருகே மருக்காலன்குளத்தைச் சோ்ந்த காசிப்பாண்டியன் மகன் மணிகண்டன் (40). கூலித் தொழிலாளி. இவா், திங்கள்கிழமை முற்பகல் பைக்கில் பெரியகோவிலான்குளத்தில் இருந்து மருக்காலன்குளத்துக்கு சென்று கொண்டிருந்தபோது, ஆராய்ச்சிபட்டியில் இருந்து சங்கரன்கோவிலுக்குச் சென்ற வேன் பைக் மீது மோதியதாம். இதில் தூக்கிவீசப்பட்ட மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இச்சம்பவம் தொடா்பாக பனவடலிசத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.