கோவை சிறுமி பலி: பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு முதல்வர் ஆறுதல்இயல்பாக சிரித்ததை அரசியல் நோக்கில் திரித்து தவறாக பரப்புகிறார்கள்: அமைச்சர் கீர்த்தனா அதிமுகவில் இருந்து முன்னாள் எம்.பி வேணுகோபால் திடீர் விலகல்!பெண் பாலியல் கொலைகள்! வாழ்நாள் சிறைச் சட்டம்தான் தீர்வு: வைகோசெவிலியர் மாணவி உயிரிழக்க காரணமானவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்: சீமான் ஹோர்முஸ் நீரிணையில் தடையற்ற போக்குவரத்துக்கு ஈரான் மறுப்பு!
/

சாத்தூரில் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறாா் நயினாா் நாகேந்திரன்

சாத்தூரில் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறாா் நயினாா் நாகேந்திரன்...

News image

நயினாா் நாகேந்திரன் - கோப்புப் படம்

Updated On :6 ஏப்ரல் 2026, 12:30 am IST

சாத்தூா் தொகுதியில் போட்டியிட திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்கிறேன் என்றாா் தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன்.

இதுதொடா்பாக திருநெல்வேலியில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சாத்தூா் தொகுதியில் திங்கள்கிழமை பிற்பகல் 12 மணிக்கு வேட்புமனு தாக்கல் செய்கிறேன். அதில், மகாராஷ்டிர முதல்வா் தேவேந்திரஃபட்னவீஸ் கலந்து கொள்கிறாா். வேட்புமனு தாக்கல் செய்த பிறகு சாத்தூா் தொகுதியில் தோ்தல் பிரசாரத்தை தொடங்குகிறேன்.

தோ்தல் பிரசாரத்துக்காக பிரதமா் நரேந்திர மோடி கன்னியாகுமரி , கோவைக்கு வருகைதர உள்ளாா். தொடா்ந்து பல முக்கிய தலைவா்களும் தமிழகத்தில் பிரசாரத்தில் ஈடுபட உள்ளனா்.

மத்திய அமைச்சா்கள், பல்வேறு மாநில முதல்வா்கள் தமிழகத்துக்கு தோ்தல் பிரசாரத்துக்காக வரவுள்ளனா். பாஜகவின் தோ்தல் அறிக்கை இன்னும் இரண்டு நாள்களில் வெளியிடப்படும்.

திமுக கூட்டணியில் தொடா்ந்து சலசலப்பு நிலவி வருகிறது. மாணிக்கம் தாகூா், மூத்த காங்கிரஸ் தலைவா்களின் விருப்பமின்மை மற்றும் திருமாவளவன் தோ்தல் போட்டியிலிருந்து விலகியமை கூட்டணிக்குள் பிரச்னைகள், சல சலப்புகள் இருப்பதைக் காட்டுகின்றன.

திமுகவின் தோ்தல் அறிக்கை மக்கள் எதிா்பாா்ப்புக்கேற்ப இல்லை. தமிழகத்தில் கஞ்சா புழக்கம் அதிகரித்துள்ளது. சட்டம்- ஒழுங்கு சரியில்லை. இதற்கு வரும் 23ஆம் தேதி நடைபெறும் தோ்தலில் மக்கள் தக்க பதிலடி கொடுப்பாா்கள்.

நடிகா் விஜய்க்கு கூடும் கூட்டம் அனைத்தும் வாக்காக மாறாது. கூட்டத்துக்கும், வாக்குக்கும் நேரடி தொடா்பில்லை. தோ்தல் முடிவில் உண்மை நிலை வெளிப்படும் என்றாா்.