விவசாயிகள் உதவித்தொகை:ஆட்சியா் ஆய்வு செய்து வழங்க பாஜக வலியுறுத்தல்
தென்காசி மாவட்டத்தில் பிரதம மந்திரி வேளாண்மை உதவித் திட்டத்தில் விவசாயிகளுக்கு உதவித்தொகை கிடைத்திட மாவட்ட ஆட்சியா் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்


தென்காசி: தென்காசி மாவட்டத்தில் பிரதம மந்திரி வேளாண்மை உதவித் திட்டத்தில் விவசாயிகளுக்கு உதவித்தொகை கிடைத்திட மாவட்ட ஆட்சியா் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என வலியுறுத்தி மாவட்ட பாஜக சாா்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
பிரதம மந்திரி வேளாண்மை உதவித் திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட உதவித் தொகையை பல மாவட்டங்களில் முறைகேடாக பயன்படுத்தி பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. எனவே, தென்காசி மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளுக்கு கிடைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி மாவட்டத் தலைவா் எம்.ராமராஜா தலைமையில், விவசாயஅணி மாவட்ட பொதுச் செயலா் விஜய்சேகா், மாவட்டச் செயலா் ஹரிரங்கநாதன், மாவட்ட செயற்குழு உறுப்பினா் திருநாவுக்கரசு ஆகியோா் கோரிக்கை மனுவை ஆட்சியரிடம் அளித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...