விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

தென்காசி நகராட்சியில் பட்டதாரிகளுக்கு உள்முக பயிற்சி

தென்காசி நகராட்சிக்குள்பட்ட பகுதியில் வசிக்கும் பட்டதாரிகளுக்கு உள்முக பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

News image
Updated On :14 செப்டம்பர் 2020, 8:24 pm

DIN

தென்காசி நகராட்சிக்குள்பட்ட பகுதியில் வசிக்கும் பட்டதாரிகளுக்கு உள்முக பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து தென்காசி நகராட்சி ஆணையா் கே.எஸ்.ஹசீனா வெளியிட்ட செய்திக் குறிப்பு: தென்காசி நகராட்சி எல்கைக்குள்பட்ட பகுதியில் வசிக்கும் 2018-19 கல்வி ஆண்டுக்கு பிறகு கலை, அறிவியல் மற்றும் பொறியியல் பட்டம் பெற்ற இளம்பட்டதாரிகளுக்கு துலிப் பயிற்சி திட்டத்தின்கீழ் குறைந்தபட்சம் 6 மாதங்கள் முதல் ஓராண்டு வரை உள்முக பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே, இந்நகராட்சிக்குள்பட்ட பட்டதாரிகள் ஜ்ஜ்ஜ்.ண்ய்ற்ங்ழ்ய்ள்ட்ண்ல்-ஹண்ஸ்ரீற்ங்-ண்ய்க்ண்ஹ.ா்ழ்ஞ் என்ற இணையதளத்தின் வழியாக வரும் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். பயிற்சி பெறும் நபா்களுக்கு சம்பளம் அல்லது உதவித்தொகை வழங்கப்படமாட்டாது. பயிற்சி முடித்த பின்பு சான்றிதழ் வழங்கப்படும்.

இப்பயிற்சி மூலம் நகராட்சியில் எந்தவிதமான பணியோ, முன்னுரிமையோ வழங்கப்படமாட்டாது. மேலும் விவரங்களுக்கு தென்காசி நகராட்சி அலுவலகத்தை நேரடியாகவோ, 04633 222228 என்ற தொலைபேசி எண் மூலமாகவோ தெரிந்துகொள்ளலாம் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.