எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

பாவூர்சத்திரம் பகுதியில் திமுக கூட்டணிக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பாவூர்சத்திரம் பகுதியில் திங்கள்கிழமை 3 இடங்களில் திமுக கூட்டணிக் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

News image
பாவூர்சத்திரம் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுக கூட்டணிக் கட்சிகள்.
Updated On :28 செப்டம்பர் 2020, 8:57 am

DIN

தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் பகுதியில் திங்கள்கிழமை 3 இடங்களில் திமுக கூட்டணிக் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

விவசாயிகள் மற்றும் சிறு வணிகர்களை பாதிக்கும் மத்திய அரசின் வேளாண் சட்ட மசோதாக்களைக் கண்டித்தும், வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தியும், கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் பாவூர்சத்திரம் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மேற்கு மாவட்ட பொறுப்பாளர் வழக்குரைஞர் பொ.சிவபத்மநாதன் தலைமை வகித்தார். 

தொழிலதிபர் ஆர்.கே.காளிதாசன், மாவட்ட இளைஞரணி செயலர் ஆறுமுகச்சாமி, ஒன்றியச்செயலர் சீனித்துரை, விவசாய அணி துணைச்செயலர் செல்லப்பா, வட்டார காங்கிரஸ் தலைவர் ஜேசுஜெகன், மற்றும் மதிமுக, இந்திய, மார்ச்சிய கம்யூனிஸ்;டு, திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள் தமிழ்புலிகள் உள்ளிட்ட கூட்டணிக்கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கீழப்பாவூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் சாலைப்புதூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஆலங்குளம் சட்டப்பேரவை உறுப்பினர் டாக்டர் பூங்கோதை ஆலடிஅருணா தலைமை வகித்தார். இதில் திமுக ஒன்றியச்செயலர் சிவன்பாண்டியன் மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர். கீழப்பாவூர் பேரூர் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேரூர் செயலர் ஜெகதீசன், முன்னாள் பேரூராட்சித்தலைவர் பொன்.அறிவழகன், காங்கிரஸ் மாவட்ட துணைத்தலைவர் செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.