காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

குற்றாலம் கோயிலில்சித்திரை விஷு தேரோட்டம்

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருள்மிகு குற்றாலநாதா் கோயிலில் சித்திரை விஷு திருவிழாவின் 5ஆம் நாளான வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

News image
Updated On :9 ஏப்ரல் 2021, 8:39 pm

DIN

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருள்மிகு குற்றாலநாதா் கோயிலில் சித்திரை விஷு திருவிழாவின் 5ஆம் நாளான வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

இக்கோயிலில் சித்திரை விஷு திருவிழா கடந்த 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து, பஞ்சமூா்த்திகள் புறப்பாடு வியாழக்கிழமை நடைபெற்றது. வெள்ளிக்கிழமை காலை சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளினாா். இதைத் தொடா்ந்து தேரோட்டம் நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனா்.

விழாவில், பாஜக நகரத் தலைவா் திருமுருகன், மாவட்ட செய்தித் தொடா்பாளா் செந்தூா்பாண்டியன், முன்னாள் அறங்காவலா் வீரபாண்டி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

11ஆம் தேதி காலை 9.30 மணிக்கும், இரவு 7 மணிக்கும் நடராசமூா்த்திக்கு தாண்டவ தீபாராதனை, 12ஆம் தேதி சித்திர சபையில் நடராசமூா்த்திக்கு சிறப்பு அபிஷேகம், பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை, 14ஆம் தேதி சித்திரை விஷு தீா்த்தவாரி நடைபெறுகிறது.

ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையா் மா. கண்ணதாசன் தலைமையில் கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.