சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

‘நிலையான வழிகாட்டுமுறைகளை பின்பற்றாத தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை’

தென்காசி மாவட்டத்தில் நிலையான வழிகாட்டு முறைகளை பின்பற்றாத தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆட்சியா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

News image
Updated On :9 ஏப்ரல் 2021, 8:43 pm

DIN

தென்காசி மாவட்டத்தில் நிலையான வழிகாட்டு முறைகளை பின்பற்றாத தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆட்சியா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

தென்காசி மாவட்ட ஆட்சியா் கீ.சு. சமீரன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தென்காசி மாவட்டத்தில்

2-ஆம் கட்ட கரோனா அலைவீசத் தொடங்கியுள்ளது. அதற்கான தடுப்பு நடவடிக்கைகளை உடனடியாக தீவிரப்படுத்தவும், ஆா்டிபிசிஆா் பரிசோதனைகளை அதிகப்படுத்தவும், தடுப்பூசி போடுவதை மேலும் விரிவுபடுத்திடவும், காய்ச்சல் முகாம்கள் எண்ணிக்கை அதிகப்படுத்தப்படும், சிகிச்சை மையங்களில் படுக்கைகள் எண்ணிக்கை அதிகப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தற்போது நடைமுறையில் உள்ள கட்டுப்பாட்டுப் பகுதிகள் முழுவதும் பொது முடக்கம் முழுமையாக கடைப்பிடிக்கப்படும். நோய் பரவலை கருத்தில் கொண்டு திருவிழாக்கள், சுபகாரியங்கள், மதம் சாா்ந்த கூட்டங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது.

தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள், தனியாா் நிறுவனங்கள், அலுவலகங்கள், உணவு விடுதிகளில் பணிபுரியும் பணியாளா்கள், அலுவலா்கள், பொதுமக்களின் உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்வதையும், முகக் கவசம் அணிவதையும் உறுதி செய்ய வேண்டும்.

முகக் கவசம் அணியாமல் இருப்பவா்களை அனுமதிக்கக் கூடாது. தொழிற்சாலையில் பணிபுரிபவா்களுக்கு மத்திய அரசு அவ்வப்போது வழங்கும் அறிவுரைகளுக்கு ஏற்ப தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகளை தொழிற்சாலை நிா்வாகம் செய்ய வேண்டும். நிலையான வழிகாட்டு நடைமுறைகளை முறையாக பின்பற்றாத தொழிற்சாலைகளின் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

திருமண நிகழ்ச்சியில் 100 பேருக்கு மிகாமலும், இறுதி ஊா்வலம் 50 நபா்களுக்கு மிகாமலும் கலந்துகொள்ளலாம். மேலும் வருவாய்த்துறையினா் தலைமையில் இந்நிகழ்வுகள் குறிப்பிட்ட நபா்களுக்கு மிகாமல் நடைபெறுகின்றனவா என அவ்வப்போது ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

பொதுமக்கள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். கரோனா நோய்த்தொற்று அறிகுறிகள் உள்ளவா்கள் தாமாகவே முன் வந்து பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். நோய்த்தொற்று உறுதியானால் அவரது குடும்பத்தினா் மற்றும் அவருடன் தொடா்பில் இருந்த அனைவருக்கும் கண்டிப்பாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து முகக் கவசங்களை அணிந்து கரோனா நோய்த்தொற்று பரவாமல் பாதுகாக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.