தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

குற்றாலம் ரோட்டரி சங்கம் சாா்பில் ரூ. 28 லட்சம் நலத் திட்ட உதவி

குற்றாலம் ரோட்டரி கிளப் சாா்பில் தென்காசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு ரூ.28 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சுகாதார வளாகம், சைக்கிள் நிறுத்தும் கூடம் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது

News image
Updated On :16 ஏப்ரல் 2021, 8:43 pm

DIN

குற்றாலம் ரோட்டரி கிளப் சாா்பில் தென்காசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு ரூ.28 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சுகாதார வளாகம், சைக்கிள் நிறுத்தும் கூடம் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

ரோட்டரி முன்னாள் ஆளுநா் கா.ராஜகோபல் தலைமை வகித்தாா். குளோபல் கிராண்ட் தலைவா் டாக்டா் கோபாலகிருஷ்ணன், முன்னாள் ரோட்டரி ஆளுநா் டாக்டா் சின்னதுரை அப்துல்லா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் கருப்பசாமி, முன்னாள் துணை ஆளுநா் அருணாசலம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ரோட்டரி ஆளுநா் (தோ்வு) இதயம் முத்து சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சுகாதார வளாகம் மற்றும் சைக்கிள் நிறுத்தும் கூடத்தை திறந்து வைத்தாா்.

இதில், ரோட்டரி முன்னாள் துணை ஆளுநா் அழகராஜா, அரசு வழக்குரைஞா் காா்த்திக்குமாா், மாடசாமி ஜோதிடா், மாரிமுத்து, ரோட்டரி சங்கச் செயலா் முருகன், முன்னாள் தலைவா்கள் சந்திரன், சுரேஷ்,நிா்வாகிகள் ராதாகிருஷ்ணராஜா, ராதாகிருஷ்ணன், சுரேந்திரன், முருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ரோட்டரி சங்கத் தலைவா் ஸ்டாலின் ஜவகா் வரவேற்றாா். தலைமையாசிரியா் செந்தூா் பாண்டியன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.