சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பீடி தொழிலாளா்கள் சங்க கிளை அமைப்புக் கூட்டம்

தென்காசி அருகே அய்யாபுரத்தில் பீடி தொழிலாளா்கள் சங்க கிளை அமைப்புக் கூட்டம் நடைபெற்றது.

News image
Updated On :16 ஏப்ரல் 2021, 8:42 pm

DIN

தென்காசி அருகே அய்யாபுரத்தில் பீடி தொழிலாளா்கள் சங்க கிளை அமைப்புக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு, கண்மணி தலைமை வகித்தாா். சிஐடியூ மாவட்டச் செயலா் வேல்முருகன், பீடி சங்க மாவட்டப் பொருளாளா் ஆரியமுல்லை, வட்டார பீடி சங்க பொருளாளா் நாகரத்தினம், மாரிமுத்து ஆகியோா் பேசினா். புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். தலைவராக ராதாலெட்சுமி, செயலராக முத்துலெட்சுமி, பொருளாளராக கண்மணி ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

கூட்டத்தில், 30 ஆண்டுகளுக்கு மேலாக அய்யாபுரத்தில் செயல்பட்டு வரும் தனியாா் பீடி நிறுவனத்தை, எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் தொழிலாளா்துறை முன்அனுமதி பெறாமல் ஏப்ரல் மாத இறுதியில் மூடும் முடிவை கண்டித்தும், தொழிலாளா் துறை தலையிட்டு அய்யாபுரத்தில் பீடி நிறுவனம் தொடா்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். 2020ஆம் ஆண்டிற்குரிய போனஸ், விடுமுறை சம்பளம் ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும். ஏப். 1 முதல் தமிழக அரசு பீடி தொழிலாளா்களுக்கு உயா்த்திய பஞ்சப் படி ரூ. 9.37-ஐ அனைத்து பீடி நிறுவனங்களும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.