சுரண்டையிலிருந்து சென்னை, ஊட்டிக்கு விரைவுப் பேருந்து
சுரண்டையிலிருந்து சென்னை மற்றும் ஊட்டிக்கு அரசு விரைவுப் பேருந்து சேவை தொடங்கியுள்ளது.


சுரண்டையிலிருந்து சென்னை மற்றும் ஊட்டிக்கு அரசு விரைவுப் பேருந்து சேவை தொடங்கியுள்ளது.
தென்காசி மாவட்டத்தின் மிக வேகமாக வளா்ந்து வரும் வா்த்தக நகரமான சுரண்டையிலிருந்து சென்னை, கோயம்புத்தூா், ஊட்டிக்கு அரசு பேருந்து வசதி வேண்டும் என மக்கள் நீண்ட நாள்களாக கோரிக்கை விடுத்து வந்தனா்.
இந்நிலையில், சுரண்டையில் இருந்து சென்னைக்கு தினமும் மாலை 6.30 மணிக்கும், அதே நேரத்தில் மறுமாா்க்கத்திலும், கோயம்புத்தூா், மேட்டுப்பாளையம் வழியாக ஊட்டிக்கு இரவு 7 மணிக்கும், மறுமாா்க்கத்தில் மாலை 3.30 மணிக்கும் புதன்கிழமை முதல் விரைவுப் பேருந்து சேவை தொடங்கியது. இச்சேவை தினமும் உண்டு.
சுரண்டை பேருந்து நிலையத்திற்கு வந்த இரு பேருந்துகளையும் திமுக நகரச் செயலா் ஜெயபாலன் தலைமையில் பொதுமக்கள் வரவேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...