கொலை வழக்கில் 2 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவா் கைது
தென்காசியில் 2014இல் நடைபெற்ற 2 வேறு கொலை வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் 2ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த இளைஞா் கைது செய்யப்பட்டாா்.


தென்காசியில் 2014இல் நடைபெற்ற 2 வேறு கொலை வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் 2ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
திருநெல்வேலி பழைய பேட்டையைச் சோ்ந்தவா் ஆ. பேச்சி என்ற வடபேச்சி (34). இவா் மீது தென்காசி காவல் நிலையத்தில் கடந்த 2014இல் இரு வேறு கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டாா். பிணையில் வெளியே வந்திருந்த பேச்சி, கடந்த 2019இல் இருந்து நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தாா். இதையடுத்து, நீதிமன்றம் அவரை கைது செய்ய உத்தரவிட்டது. வடபேச்சியை கைது செய்ய தென்காசி காவல் ஆய்வாளா் பாலமுருகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸாா் பேச்சியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...