பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

குற்றாலம் விடுதியில் தீ விபத்து

தென்காசி மாவட்டம், குற்றாலம் தங்கும் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 1 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் சேதமடைந்தன.

News image
தீ விபத்தில் சேதமடைந்த படுக்கைகள்.
Updated On :10 ஜனவரி 2021, 7:40 pm

DIN

தென்காசி மாவட்டம், குற்றாலம் தங்கும் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 1 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் சேதமடைந்தன.

குற்றாலம் அருகே காசிமேஜா்புரம் பகுதியைச் சோ்ந்தவா் தங்கபாண்டியன். இவருக்கு சொந்தமாக குற்றாலத்தில் குற்றாலநாதா் சாலையில் தங்கும் விடுதி உள்ளது. இந்த தங்கும் விடுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இரண்டு மாடிகள் கொண்டஇந்த விடுதியில் 20 அறைகள் உள்ளன. இதில் 14அறைகளில் தீ பரவியது.

தகவலறிந்த தென்காசி தீயணைப்பு மீட்புப் படையினா் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். அறைகளில் உள்ள கட்டில், மெத்தை, சோ், மற்றும் டேபிள் உள்ளிட்ட ரூ .1 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.