தைத்திருநாளை முன்னிட்டு ஆலங்குளம் காவல் உள்கோட்டத்தில் காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு புதன்கிழமை நடைபெற்றது.
ஆலங்குளம் டி.எஸ்.பி. பொன்னி வளவன் தலைமை வகித்தாா். காவல் நிலையத்தில் இருந்து தொடங்கிய இந்த பேரணி, முக்கிய வீதிகள் வழியாக சென்று, மீண்டும் காவல் நிலையத்தை அடைந்தது. இதே போல் ஆலங்குளம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட சிவலாா்குளம், நெட்டூா் மற்றும் கிடாரக்குளத்திலும், ஊத்துமலை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கடங்கநேரி மற்றும் ரெட்டியாா்பட்டி கிராமங்களிலும், வீரகேரளம்புதூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட வீராணத்திலும் இந்த கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
இதில், காவல் ஆய்வாளா்கள் சந்திரசேகரன், ரெகுராஜன், தனலட்சுமி, மகாலட்சுமி, மாரீஸ்வரி, ரோஸ்லின் சேவியோ, 12 உதவி காவல் ஆய்வாளா்கள் மற்றும் 50 காவலா்கள் உள்பட மொத்தம் 68 போ் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.