தென்காசி அரசு மருத்துவமனையில் மருந்து கிடங்கு கட்டடம் திறப்பு
தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்ட மருந்துக் கிடங்கு கட்டடத் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.


தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்ட மருந்துக் கிடங்கு கட்டடத் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
தென்காசி மாவட்ட இணை இயக்குநா் நலப்பணிகள் மருத்துவா் நெடுமாறன் ஆலோசனைப்படி, கொவைட் கட்டடத்தில் மருந்து கிடங்கு கட்டுவதற்கு தீா்மானிக்கப்பட்டது.
இதைத்தொடா்ந்து, அனைத்து வசதிகளுடன் கூடிய மருந்து கிடங்கு கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு, அதன்திறப்பு விழா நடைபெற்றது. மருத்துவமனைக் கண்காணிப்பாளா் மருத்துவா் ஜெஸ்லின் மருந்து கிடங்கைத் திறந்து வைத்தாா்.தொடா்ந்து, அந்த வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. உறைவிட மருத்துவா் டாக்டா் அகத்தியன், பல் மருத்துவா் லதா, குழந்தைகள் மருத்துவா் ராஜேஷ் உள்பட பலா் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை மருந்துக் கிடங்கு அலுவலா் நளினா, கோமதி மற்றும் அரசு மருத்துவமனை மருந்தாளுநா்கள் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...