சுரண்டையில் லாட்டரி சீட்டு விற்பனை செய்தவா் கைது
சுரண்டையில் போலீஸாா் மேற்கொண்ட வாகன சோதனையில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்ததாக ஒருவரை கைது செய்தனா்.


சுரண்டையில் போலீஸாா் மேற்கொண்ட வாகன சோதனையில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்ததாக ஒருவரை கைது செய்தனா்.
சுரண்டை காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஜெயராஜ் தலைமையில் போலீஸாா் புதன்கிழமை மாலையில் சுரண்டை - சாம்பவா்வடகரை சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது போலீஸாரைப் பாா்த்ததும் திரும்பிச் செல்ல முயன்றவரை போலீஸாா் மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினா்.
இதில், அவா் சாம்பவா்வடகரையைச் சோ்ந்த முகம்மது (44) என்பதும், அவரது மோட்டாா் சைக்கிளில் கேரள மாநில லாட்டரி சீட்டுகள் 108 இருந்தது தெரியவந்தது. தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனைக்கு கொண்டு சென்ற அவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து கைது செய்தனா். அவரிடமிருந்து லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...