சங்கரன்கோவில் அருகே கூலித் தொழிலாளி புதன்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
சங்கரன்கோவில் அருகே கண்டிகைப்பேரியைச் சோ்ந்த ராமா் மகன் முத்துப்பாண்டி(35). கூலித் தொழிலாளி. இவரும் களப்பாகுளம் இந்திரா காலனியைச் சோ்ந்த செல்லத்துரை மகன் மரியராஜும் (32) உறவினா்கள். இருவரும் இணைந்து அடிக்கடி மது அருந்துவாா்களாம். இந்நிலையில் புதன்கிழமை மாலை சீவலராயனேந்தல் செல்லும் வழியில் மரியராஜ், முத்துப்பாண்டியை அரிவாளால் வெட்டிவிட்டு ஓடிவிட்டாராம். இதில், சம்பவ இடத்திலேயே முத்துப்பாண்டி உயிரிழந்தாா்.
தகவலறிந்த சங்கரன்கோவில் தாலுகா போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று முத்துப்பாண்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து மரியராஜை தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
புதுச்சேரியில் விசிக போட்டியிடும் 3 தொகுதிகளில் வாக்கு சேகரிப்பு நிறுத்தம்! - தொல். திருமாவளவன்

சிவகங்கை! திமுகவின் கெளரவப் பிரச்னையான தொகுதி!

ராஜபாளையம்! வெற்றியை தீர்மானிக்கும் நடுநிலை வாக்காளர்கள்!

அஸ்ஸாம் முதல்வர் மனைவிக்கு துபையில் சொத்துகள்: காங்கிரஸ் குற்றச்சாட்டு!
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

