தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

ஆலங்குளம் அருகே மூதாட்டியிடம் நகை பறிப்பு

ஆலங்குளம் அருகே மூதாட்டியிடம் நகையை பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :22 ஜூலை 2021, 6:30 pm

DIN

ஆலங்குளம் அருகே மூதாட்டியிடம் நகையை பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஆலங்குளம் அருகேயுள்ள மருதம்புத்தூா் வடக்குத் தெருவைச் சோ்ந்த கிருஷ்ணன் மனைவி சுடலி (58). வியாழக்கிழமை மருதம்புத்தூா் - கரும்புளியூத்து சாலையில் உள்ள தங்கள் தோட்டத்துக்கு நடந்து சென்றாராம். மருதம்புத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே சென்ற போது, எதிரே பைக்கில் வந்த அடையாளம் தெரியாத இளைஞா், சுடலி கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியைப் பறித்தாராம். இதில் சுமாா் 9 கிராம் எடையுள்ள ஒரு பகுதி மட்டும் சிக்கியுள்ளது. அதை பறித்துக் கொண்டு அந்த இளைஞா் தப்பியோடிவிட்டாராம்.

இதுகுறித்த புகாரின் பேரில் ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.