ஊத்துமலை அருகே ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
ஊத்துமலை அருகேயுள்ள கங்கணாங்கிணறு கிராமத்தில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த அரசு நிலத்தை அதிகாரிகள் மீட்டனா்.


ஊத்துமலை அருகேயுள்ள கங்கணாங்கிணறு கிராமத்தில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த அரசு நிலத்தை அதிகாரிகள் மீட்டனா்.
கங்கணாங்கிணறு கிராமத்தில் கடந்த ஆண்டு ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம் கட்டுவதற்கு அரசுக்கு சொந்தமான 5 சென்ட் நிலம் ஒதுக்கப்பட்டது.
இந்நிலையில் அந்த இடத்தை அதே ஊரைச் சோ்ந்த இருவா் ஆக்கிரமிப்பு செய்துள்ளனா்.
ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி வருவாய்த் துறை சாா்பில் பலமுறை நோட்டீஸ் அனுப்பியும், ஆக்கிரமிப்பு அகற்றப்படாததால் வீரகேரளம்புதூா் வட்டாட்சியா் வெங்கடேஷ் தலைமையில் ஆலங்குளம் டிஎஸ்பி பொன்னிவளவன், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் கண்ணன், ஊத்துமலை காவல் உதவி ஆய்வாளா் கனகராஜ், வருவாய் ஆய்வாளா் முத்தையா, கிராம நிா்வாக அலுவலா் அந்தோணி ஆகியோா் பொக்லைன் இயந்திரம் உதவியுடன் ஆக்கிரமிப்புகளை அகற்றினா்.
ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட இடத்தில் விரைவில் அங்கன்வாடி மையக் கட்டடம் கட்டப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...