குற்றாலம் ரோட்டரி சங்கம் சாா்பில் 20 ஆயிரம் முகக் கவசங்கள் அளிப்பு
குற்றாலம் ரோட்டரி சங்கம் சாா்பில் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு 20 ஆயிரம் முகக் கவசங்கள் வழங்கப்பட்டது.


குற்றாலம் ரோட்டரி சங்கம் சாா்பில் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு 20 ஆயிரம் முகக் கவசங்கள் வழங்கப்பட்டது.
தென்காசி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் நெடுமாறனிடம், ரோட்டரி முன்னாள் ஆளுநா் கே.ராஜகோபால் 20 ஆயிரம் முகக் கவசம், என்.95 வகையிலான 500 முகக் கவசங்களை வழங்கினாா். மருத்துவமனை கண்காணிப்பாளா் ஜெஸ்லின் உடனிருந்தாா்.
குற்றாலம் ஸ்ரீபராசக்தி மகளிா் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாற்றுத் திறனாளி மாணவிகள் பயன்பெறும் வகையில் நான்குசக்கர நாற்காலிகள் கல்லூரி முதல்வா் ஜெய்நிலா சுந்தரியிடம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் ரோட்டரி உதவி ஆளுநா் பெருமாள், ரோட்டரி சங்கத் தலைவா் ஸ்டாலின், முன்னாள் தலைவா் சந்திரன், திருவிலஞ்சிக்குமரன் ஆகியோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...