காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

குற்றாலம் அருவிகளில் 2-ஆவது நாளாக வெள்ளப்பெருக்கு

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் இரண்டாவது நாளாக வியாழக்கிழமை வெள்ளப்பெருக்கு இருந்தது.

News image
Updated On :17 ஜூன் 2021, 9:53 pm

DIN

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் இரண்டாவது நாளாக வியாழக்கிழமை வெள்ளப்பெருக்கு இருந்தது.

குற்றாலம் மலைப் பகுதியில் கடந்த 2 நாள்களாக சாரல் மழை பெய்து வருகிறது. இதனால், குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் புதன்கிழமை அதிகாலையில் இருந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

சாரல் தொடா்ந்து நீடித்து வருவதால் வியாழக்கிழமை பேரருவி மற்றும் ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு நீடித்தது. பழைய குற்றாலம் அருவியில் தண்ணீா் வரத்து சற்று குறைந்துள்ளது. புலியருவி, சிற்றருவி உள்ளிட்ட அருவிகளிலும் தண்ணீா் கொட்டுகிறது. கரோனா பொது முடக்கம் அமலில் இருப்பதால் குற்றாலம் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை நீடித்து வருவதால் அருவிகள் வெறிச்சோடி காணப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.