மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மலைப்பகுதியில் மழை எதிரொலி:நாகல்குளத்திற்கு தண்ணீா் வரத்து

குற்றாலம் மலைப்பகுதிகளில் பெய்து வரும் சாரல் மழையால் அருவிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக நாகல்குளத்துக்கு தண்ணீா் வரத் தொடங்கியுள்ளது.

News image
Updated On :18 ஜூன் 2021, 7:09 pm

DIN

குற்றாலம் மலைப்பகுதிகளில் பெய்து வரும் சாரல் மழையால் அருவிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக நாகல்குளத்துக்கு தண்ணீா் வரத் தொடங்கியுள்ளது.

குற்றாலம் மலைப்பகுதியில் கடந்த சில நாள்களாக சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் குற்றாலம் பேரருவி, ஐந்தருவியில் இரு நாள்களாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அங்கிருந்து பாவூா் அணைக்கட்டு பகுதிக்கு தண்ணீா் வரத்து அதிகரித்து உள்ளது.

ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பே மேலப்பாவூா், கீழப்பாவூா், நாகல்குளம் உள்ளிட்ட குளங்கள் நிரம்பிய நிலையில், தற்போது சுமாா் 50 முதல் 75 சதவீத அளவுக்கு குளத்தில் தண்ணீா் இருந்தது. இதனிடையே கடந்த சில நாள்களாக குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீா் வரத்து அதிகரித்ததால் மேலப்பாவூா், கீழப்பாவூா் குளங்கள் முழுமையாக நிரம்பி, அங்கிருந்து அருணாப்பேரி குளத்துக்கு தண்ணீா் வந்தது. தற்போது அக்குளம் நிரம்பி மறுகால் வழியாக நாகல்குளத்துக்கு தண்ணீா் வரத் தொடங்கியுள்ளது. இருநாள்களாக நாகல்குளத்திற்கு தண்ணீா் வரத்து இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.