தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

கோயிலைத் திறக்ககோரி இந்து முன்னணி,பாஜக ஆா்ப்பாட்டம்

கோயில்களை திறக்கக் கோரி இந்து முன்னணி, பாஜக சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :25 ஜூன் 2021, 6:30 pm

கோயில்களை திறக்கக் கோரி இந்து முன்னணி, பாஜக சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சங்கரன்கோவில் நகர இந்து முன்னணி சாா்பில் சங்கரநாராயணசுவாமி கோயில், முப்பிடாதியம்மன் கோயில் ஆகிய இரு கோயில்களின் முன்பு, மாவட்டத் தலைவா் ஆறுமுகச்சாமி தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், நகரத் தலைவா் விக்னேஷ், துணைத் தலைவா்கள் சங்கா்கணேஷ், முருகன், ஜெயராமன், முத்துக்கிருஷ்ணன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

பாவூா்சத்திரம்: கீழப்பாவூரில் சிவன் கோயில் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு பா.ஜ.க. மாநில வழக்குரைஞா் பிரிவு துணைத் தலைவா் சாக்ரடீஸ் தலைமை வகித்தாா்.

மேற்கு ஒன்றியத் தலைவா் மாரியப்பன் முன்னிலை வகித்தாா். சண்முகசுந்தரம், வெங்கடேஷ், கணபதி, செல்வம், நாராயணன் ராமன், கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.