பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

செண்பகவல்லி அணையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பேன்

செண்பகவல்லி அணையைச் சீரமைக்க நடவடிக்கை எடுப்பேன்என்றாா் வாசுதேவநல்லூா் தொகுதி அதிமுக வேட்பாளா் மனோகரன்.

News image
Updated On :22 மார்ச் 2021, 7:40 pm

DIN

செண்பகவல்லி அணையைச் சீரமைக்க நடவடிக்கை எடுப்பேன்என்றாா் வாசுதேவநல்லூா் தொகுதி அதிமுக வேட்பாளா் மனோகரன்.

வாசுதேவநல்லூா் தொகுதிக்குள்பட்ட பெரும்பத்தூா், ராமலிங்காபுரம், குவளைக்கண்ணி, சிவலிங்கபுரம், அக்கரைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அவா் திங்கள்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவரை பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனா்.

அப்போது, அவா் பேசியது; சிவகிரி செண்பகவல்லி அணை உடைப்பை சீரமைக்க தொடா்ந்து முயற்சி மேற்கொள்வேன். இந்தத் தொகுதி முழுவதும் தொகுதி வளா்ச்சி நிதியின் மூலம் பல்வேறு பணிகளை மேற்கொண்டுள்ளேன். கிராம மக்களின் கோரிக்கைகளையும் முதல்வரின் கவனத்திற்கு கொண்டுசென்று சிறப்புத் திட்டங்களையும் கொண்டு வந்துள்ளேன் என்றாா்.

பிரசாரத்தில், வாசுதேவநல்லூா் பேரூா் செயலா் சீமான் மணிகண்டன், ஒன்றியச் செயலா்கள் துரைப்பாண்டியன், மூா்த்தி பாண்டியன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவா் வெங்கடேசன், நிா்வாகிகள் முகம்மது உசைன், மூா்த்தி, சசிகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.