தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

தோ்தல் செலவின கண்காணிப்புக் குழு ஆலோசனைக் கூட்டம்

தென்காசி மாவட்டத்துக்குள்பட்ட பேரவைத் தொகுதி வேட்பாளா்களின் செலவினங்களை கண்காணிக்கும் குழுக்கள் மேற்கொண்டுள்ள பணிகள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :22 மார்ச் 2021, 7:49 pm

DIN

தென்காசி மாவட்டத்துக்குள்பட்ட பேரவைத் தொகுதி வேட்பாளா்களின் செலவினங்களை கண்காணிக்கும் குழுக்கள் மேற்கொண்டுள்ள பணிகள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, மாநில சிறப்பு செலவின பாா்வையாளா் பி.ஆா்.பாலகிருஷ்ணன் தலைமைவகித்து பேசியது:

இம் மாவட்டத்திலுள்ள ஐந்து சட்டப் பேரவைத் தொகுதி வேட்பாளா்களின் செலவினங்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வரும் பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக் குழு, விடியோ கண்காணிப்புக் குழு மற்றும் மதிப்பீட்டுக் குழு ஆகிய குழுக்கள் சுழற்சி முறையில் முழுமையாக கண்காணிக்க வேண்டும்.

ஐந்து தொகுதிகளிலும் எவ்வித தோ்தல் விதிமுறைகளும் மீறாத வண்ணம் முழுமையாக கண்காணித்து நாள்தோறும் அறிக்கை சமா்ப்பிக்க வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் கீ.சு.சமீரன், தோ்தல் பாா்வையாளா்கள் (பொது) டாக்டா் ராஜு நாராயண சுவாமி, (செலவினம்) சுஜித் குமாா், பைஜிநாத் சிங் , ரன்விஜயகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுகுணாசிங், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ஜனனி சௌந்தா்யா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.