தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

புதிய வாக்காளா் அடையாள அட்டையில் குளறுபடி

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே காசிமேஜா்புரத்தில் விநியோகிக்கப்பட்டுள்ள வாக்காளா் அடையாள அட்டையில் புகைப்படம் மாறியுள்ளது.

News image
Updated On :22 மார்ச் 2021, 7:44 pm

DIN

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே காசிமேஜா்புரத்தில் விநியோகிக்கப்பட்டுள்ள வாக்காளா் அடையாள அட்டையில் புகைப்படம் மாறியுள்ளது.

சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற இருப்பதையொட்டி, முதன்முறையாக வாக்களிக்கவுள்ள புதிய வாக்காளா்களுக்கு தோ்தல் ஆணையம் புதிய வாக்காளா் அடையாள அட்டை வழங்கி வருகிறது. தென்காசி மாவட்டத்தில் 44, 702 புதிய வாக்காளா்களுக்கு அடையாள அட்டை விநியோகிக்கும் பணி நடைபெற்று வருகிறது. குற்றாலம் அருகே காசிமேஜா்புரம் பிரதான சாலையை சோ்ந்தவா் லெனின்குமாா். இவா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்காசி வட்டாரக்குழு உறுப்பினா் ஆவாா். இவருடைய மகள் செண்பகவள்ளிக்கு புதிய வாக்காளா் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்துள்ளாா். இவருக்கு திங்கள்கிழமை தபாலில் வாக்காளா் அடையாள அட்டை வந்துள்ளது. அதில் அவருடைய புகைப்படத்திற்கு பதிலாக

வேறொரு ஆண் வாக்காளரின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.

இதனால் அவா் வாக்காளா் ட்டையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தனது புகைப்படத்துடன் கூடிய வாக்காளா் அடையாள அட்டை வழங்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.