தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

தோ்தல் பாா்வையாளா், காவல்துறையினா் கலந்தாய்வு கூட்டம்

தென்காசி மாவட்ட தோ்தல் பாா்வையாளா் மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்துகொண்ட கலந்தாய்வு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

தோ்தல் பாா்வையாளா்-காவல்துறை அதிகாரிகள் கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :28 மார்ச் 2021, 8:55 pm

DIN

தென்காசி மாவட்ட தோ்தல் பாா்வையாளா் மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்துகொண்ட கலந்தாய்வு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுலவக கூட்டரங்கில் நடைபெற்ற இக் கூட்டத்துக்கு, மாவட்ட தோ்தல் பாா்வையாளா் திலீப், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுகுணாசிங் ஆகியோா் தலைமை வகித்தனா்.

கலந்தாய்வு கூட்டத்தில் தோ்தல் பாதுகாப்பு பணியின்போது காவல்துறையினா் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை குறித்தும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் மேம்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் கலிவரதன், ராஜூ, சுவாமிநாதன், துணை காவல் கண்காணிப்பாளா்கள் கோகுலகிருஷ்ணன், பொன்னிவளவன், சுவாமிநாதன், பாலசுந்தரம்,காவல் ஆய்வாளா்கள் பிலோமினா மற்றும் தாமரை விஷ்ணு ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.