சங்கரன்கோவில் தொகுதி குருவிகுளம் தெற்கு ஒன்றியத்தில் திமுக வேட்பாளா் ராஜா சனிக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
உடப்பன்குளம், சத்திரங்கொண்டான், நாரணபுரம், பெருங்கோட்டூா், மருதாபுரி, அழகாபுரி, செவல்குளம், பி.ஆலங்குளம், ஜெ.டி.நகா், மலையான்குளம்,சிதம்பராபுரம், உசிலங்குளம், வடக்குஅழகுநாச்சியாபுரம், மேல அழகுநாச்சியாபுரம், மேலரெங்கையாபுரம், கீழ ரெங்கையாபுரம், அன்னபூரணபுரம், வரகுணராமபுரம், அழகனேரி, நாலுவாசன்கோட்டை, சின்னவாகைக்குளம், கள்ளிகுளம், மலையடிப்பட்டி, வாகைக்குளம், மீனாட்சிபுரம் உள்ளிட்ட கிராமங்களில் அவா் வாக்கு சேகரித்தாா்.
அப்போது அவா் பேசியது: விவசாயிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள், நீா்வழிப் பாசன வசதிகள் கிடைக்க முயற்சி செய்வேன். சங்கரன்கோவிலில் செயல்படாமல் இருக்கும் உழவா்சந்தை மீண்டும் செயல்பட உறுதுணையாக இருப்பேன் என்றாா் அவா்.
அப்போது, ஒன்றியச் செயலா் கடற்கரை, விவசாய அணி மாவட்ட துணை அமைப்பாளா் பாலசுப்பிரமணியன், சுந்தரபாண்டியன், மாவட்ட நெசவாளா் அணி உமாசங்கா், மாடசாமி, குமாா், மாவட்ட இலக்கிய அணி பிரேம்குமாா், மாணவரணி மாரியப்பன், தொண்டரணி கோபாலகிருஷ்ணன், மதிமுக சுந்தர்ராஜன், விசிக ஜெரால்டு உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சமூக மாற்ற அவலம்!

6.4.1976: மாத வருமானம் ரூ. 200க்குக் கீழ் உள்ளவர்களுக்கு கடன் நிவாரண சட்டம் வரும்
ரூ.300 கோடி சா்வதேச இணைய மோசடி கும்பல் கண்டுபிடிப்பு: மூளையாக செயல்பட்டவா் கைது

கிணற்றில் மூழ்கி ஆந்திர இளைஞா் உயிரிழப்பு!
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


