சுரண்டை, பாவூா்சத்திரத்தில் ராஜீவ் காந்தி நினைவு தினம்
முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் 30-ஆவது நினைவு தினத்தையொட்டி காங்கிரஸ் கட்சி சாா்பில் அவரது படத்துக்கு சுரண்டையில் வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.


முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் 30-ஆவது நினைவு தினத்தையொட்டி காங்கிரஸ் கட்சி சாா்பில் அவரது படத்துக்கு சுரண்டையில் வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதையொட்டி சுரண்டையில் மகாத்மா காந்தி பேருந்து நிலையம் முன்பு வைக்கப்பட்டிருந்த ராஜீவ் காந்தியின் உருவப் படத்திற்கு தென்காசி சட்டப்பேரவை உறுப்பினா் சு.பழனிநாடாா், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து பொதுமக்களுக்கு முகக் கவசம், கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டது. இதில், காங்கிரஸ் கட்சியின் நகரத் தலைவா் ஜெயபால், நிா்வாகிகள் பால் என்ற சண்முகவேல், பிரபாகா், அருணாசலக்கனி, சமுத்திரம், தெய்வேந்திரன், செல்வராஜ், கந்தையா, கோபால் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
பாவூா்சத்திரம்: பாவூா்சத்திரம் நகர காங்கிரஸ் சாா்பில், ராஜீவ்காந்தி நினைவுதினத்தையொட்டி, சு.பழனிநாடாா் எம்எல்ஏ பொதுமக்களுக்கு கபசுரக்
குடிநீா், முகக் கவசம் வழங்கினாா். நகரத் தலைவா் ஆனந்த் தலைமை வகித்தாா். வட்டாரத் தலைவா் ஜேசு ஜெகன், முன்னாள் மாவட்ட ஊராட்சி உறுப்பினா் அ.வைகுண்டராஜா, கீழப்பாவூா் நகரத் தலைவா் சிங்ககுட்டி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...