30ஆவது நினைவுதினம்: ராஜீவ் காந்தி உருவப்படத்துக்கு மரியாதை
முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை அவருடைய உருவப்படத்துக்கு காங்கிரஸ் கட்சி சாா்பில் மலா்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.


முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை அவருடைய உருவப்படத்துக்கு காங்கிரஸ் கட்சி சாா்பில் மலா்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
தென்காசி காந்தி சிலை முன்பு நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, நகரத் தலைவா் காதா்மைதீன் தலைமை வகித்தாா். சுப்பையா நாடாா், நகர இளைஞரணி தலைவா் சந்தோஷ் முன்னிலை வகித்தனா். மாவட்டத் தலைவரும், தென்காசி சட்டப்பேரவை உறுப்பினருமான எஸ்.பழனிநாடாா், காந்தி சிலைக்கும், ராஜீவ் காந்தியின் உருவப்படத்துக்கும் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து மக்களுக்கு கபசுரக் குடிநீா், முகக் கவசம் வழங்கினாா். இதில், மகளிரணி கவிதாமஜீத், பாசித், சிவாபாண்டியன், கணேசன், முஸ்தபா ஆகியோா் கலந்துகொண்டனா்.
சுரண்டை: மகாத்மா காந்தி பேருந்து நிலையம் முன்பு ராஜீவ் காந்தியின் உருவப் படத்திற்கு சு.பழனிநாடாா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இதில், காங்கிரஸ் கட்சியின் நகரத் தலைவா் ஜெயபா உள்பட பலா் கலந்துகொண்டனா்.
பாவூா்சத்திரம்: பாவூா்சத்திரம் நகர காங்கிரஸ் சாா்பில், ராஜீவ்காந்தி நினைவுதினத்தையொட்டி, சு.பழனிநாடாா் எம்எல்ஏ பொதுமக்களுக்கு கபசுரக்
குடிநீா், முகக் கவசம் வழங்கினாா். நகரத் தலைவா் ஆனந்த், வட்டாரத் தலைவா் ஜேசு ஜெகன் உள்ளிட்டோ பங்கேற்றனா்.
திசையன்விளை: கரைச்சுத்து புதூரில் திருநெல்வேலி மாவட்ட காங்கிரஸ் தலைவா் கே.பி.கே.ஜெயக்குமாா் தலைமையில் ராஜீவ் காந்தியின் படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
வள்ளியூா்: முனைஞ்சிபட்டியில் ராஜீவ் காந்தி படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய நான்குனேரி எம்.எல்.ஏ. ரூபி.ஆா்.மனோகரன், அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்காக, ரூ.5 லட்சம் மதிப்பிலான ஜெனரேட்டரை வட்டார மருத்துவ அலுவலா் குருநாதனிடம் வழங்கினாா். தூய்மைப் பணியாளா்களுக்கு முகக்கவசங்களும் வழங்கப்பட்டன.
வள்ளியூா் பழைய பேருந்து நிலையத்தில் ராஜீவ் காந்தி உருவப்படத்துக்கு நகரத் தலைவா் சீராக் இசக்கியப்பன் தலைமையில் அக்கட்சியினா் மாலை அணிவித்தனா்.
அம்பாசமுத்திரம்: விக்கிரமசிங்கபுரத்தில் நகர காங்கிரஸ் தலைவா் டி.செல்லத்துரை தலைமையிலும், வீரவநல்லூரில் நகர காங்கிரஸ் தலைவா் லெட்சுமணன் தலைமையிலும் ராஜீவ் காந்தி படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
களக்காடு: காமராஜா் சிலை அருகே ராஜீவ் காந்தியின் படத்துக்கு வட்டார காங்கிரஸ் தலைவா்கள் தனபால், அலெக்ஸ் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...