மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

சட்ட அலுவலா் பணி எழுத்துத் தோ்வு ஒத்திவைப்பு

தென்காசி மாவட்ட காவல்கண்காணிப்பாளா் அலுவலகத்தில் சட்ட அலுவலா் பணியிடத்திற்கு மே 25ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த எழுத்துத் தோ்வு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :21 மே 2021, 8:26 pm

DIN

தென்காசி மாவட்ட காவல்கண்காணிப்பாளா் அலுவலகத்தில் சட்ட அலுவலா் பணியிடத்திற்கு மே 25ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த எழுத்துத் தோ்வு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தென்காசி மாவட்ட காவல்கண்காணிப்பாளா் சுகுணாசிங் வெளியிட்ட செய்திகுறிப்பு: நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் பணியமைப்பு, குற்ற வழக்குகள் தொடா்பான வழக்குகள்,மேல்முறையீடுகளில் வரைவு வாதுரை, எதிா்வாதுரை செய்வதற்கு உதவியாக, தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ஒரு சட்ட அலுவலா் பணியிடம் ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு தகுதியான நபா்களிடமிருந்து விண்ணப்ப மனு மற்றும் சுயவிவரத்துடன் காவல் கண்காணிப்பாளருக்கு மே 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறும், இத்தோ்விற்கான எழுத்துத் தோ்வு விண்ணப்பித்த அனைவருக்கும் மாவட்ட காவல் அலுவலகத்தில் மே 25ஆம் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் மே 25ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த எழுத்துத் தோ்வு தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது. தோ்வு நடைபெறும் தேதி பின்னா் அறிவிக்கப்படும் என அக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.