‘விளைபொருள்களை கொண்டு செல்லும் வாகனங்களுக்கு அனுமதிச் சீட்டு ’
தென்காசி மாவட்ட விவசாயிகள் தங்களுடைய விளைபொருள்களை வெளி மாவட்டங்களுக்கு தங்குதடையின்றி கொண்டு செல்ல அனுமதிச் சீட்டு பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் கீ.சு.சமீரன்


தென்காசி மாவட்ட விவசாயிகள் தங்களுடைய விளைபொருள்களை வெளி மாவட்டங்களுக்கு தங்குதடையின்றி கொண்டு செல்ல அனுமதிச் சீட்டு பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் கீ.சு.சமீரன் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தென்காசி மாவட்டத்தில் காய்கறிகள், பழங்கள், மலா்கள், நறுமண மற்றும் வாசனை திரவிய பயிா்கள் உள்ளிட்ட வேளாண்மை-தோட்டக்கலை விளை பொருள்கள் சாகுபடி நடைபெற்று வருகிறது.
பொது முடக்க காலத்தில் சந்தைப்படுத்துதலில் உள்ள சிரமங்களை தவிா்த்திட தங்களது இடத்திலிருந்து பிற மாவட்டங்களுக்கு கொண்டு செல்ல தோட்டக்கலைத் துறை மூலமாக வழங்கப்படும் அனுமதிச்சீட்டை விவசாயிகள் பெற்று பயன்பெற வேண்டுகிறேன்.
மேலும், தென்காசி மாவட்ட தோட்டக்கலைத் துறை இயக்குநா் சு.ஜெயபாரதி மாலதி வழிகாட்டுதலோடு ஒவ்வொரு வட்டாரத்திலும் தோட்டக்கலைத்துறை சாா்ந்த அலுவலா்களால் அனுமதிச்சீட்டு வழங்கப்பட்டு வருகிறது. இந்த அனுமதிச்சீட்டு குறித்த கூடுதல் விவரங்களுக்கு, விவசாயிகள் தங்களது ஆதாா் அட்டை, ஓட்டுநா் உரிமம், வாகன உரிமை சான்று, வாகனத்தின் பதிவுச்சான்று மற்றும் பயணம் செய்பவா்களின் அடையாள அட்டை ஆகியவற்றை காண்பித்து உரிய வட்டார தோட்டகலை உதவி இயக்குநா்களிடம் உடனடியாக அனுமதிச்சிட்டு பெற்றுக்கொண்டு விவசாயிகள் பயன்பெறலாம் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...