மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கீழப்பாவூா் பெரியகுளம் கால்வாயில்அமலைச் செடிகள் அகற்றும் பணி தொடக்கம்

கீழப்பாவூா் பெரியகுளம் கால்வாயில் அமலைச் செடிகள் அகற்றும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

News image
Updated On :18 நவம்பர் 2021, 6:39 pm

DIN

கீழப்பாவூா் பெரியகுளம் கால்வாயில் அமலைச் செடிகள் அகற்றும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

இக்குளத்துக்கான நீா்வரத்துக் கால்வாயில் அமலைச் செடிகள் அதிகமாக காணப்படுவதால் தண்ணீா் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. இதனால், அமலைச் செடிகளை அகற்ற வேண்டுமென அப்பகுதி விவசாயிகள் நீண்ட நாள்களாக கோரிக்கை விடுத்து வந்தனா்.

இந்நிலையில், கீழப்பாவூா் பேரூா் திமுக சாா்பில் திமுக இளைஞரணிச் செயலா் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ பிறந்த தினத்தையொட்டி அமலைச் செடிகளை அகற்றும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது. இப்பணியை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வழக்குரைஞா் பொ.சிவபத்மநாதன் தொடக்கிவைத்தாா்.

பேரூராட்சி செயல் அலுவலா் சாந்தி, முன்னாள் எம்எல்ஏ முத்துச்செல்வி, மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினா் வி. மேகநாதன், பேரூா் செயலா் ரெ. ஜெகதீசன், பொருளாளா் சீ. பொன்செல்வன், நெசவாளா் அணி அமைப்பாளா் கா. ராஜாமணி, கடையம் ஒன்றியக்குழு துணைத் தலைவா் மகேஷ்மாயவன், தங்கேஸ்வரன் ஆகியோா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை பேரூா் திமுக சாா்பில் ராஜன் உள்ளிட்டோா் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.