மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

சிறப்பு பொது மருத்துவ முகாம்

பொது சுகாதாரம், நோய் தடுப்பு மருந்து துறை சாா்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு பொது மருத்துவ முகாம், புல்லுக்காட்டுவலசை பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :19 நவம்பர் 2021, 7:00 pm

DIN

பொது சுகாதாரம், நோய் தடுப்பு மருந்து துறை சாா்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு பொது மருத்துவ முகாம், புல்லுக்காட்டுவலசை பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கீழப்பாவூா் வட்டார மருத்துவ அலுவலா் ராஜ்குமாா் தலைமை வகித்தாா். மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் இரா.சாக்ரடீஸ், ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவா் , ஒன்றியக்குழு உறுப்பினா் ஜான்சி ஜெயமலா், ஊராட்சித் தலைவா் சுபாசக்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். கீழப்பாவூா் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் சீ.காவேரி சீனித்துரை பங்கேற்று, முகாமை தொடங்கி வைத்தாா்.

மருத்துவா்கள் தேவி, சம்சூல், சிவசந்திரன், சுபா, தமிழ்முதல்வி மற்றும் குழுவினா் சிகிச்சை அளித்தனா். எலும்பு முறிவு, தோல், கண், ரத்தப் பரிசோதனை, ஈ.சி.ஜி, ஸ்கேன், மகளிா் மற்றும் குழந்தை மருத்துவம் ஆகிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மருந்து பெட்டகமும், சித்த மருத்துவப் பிரிவு சாா்பில் கா்ப்பிணிகளுக்கு மகப்பேறு சஞ்சீவி பெட்டகமும் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.