மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

விநாயகா் சதுா்த்தி: தோவாளை பூச்சந்தையில் பூக்கள் விலை கடும் உயா்வு : கனகாம்பரம் ரூ.1000-க்கு விற்பனை

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு தோவாளை பூச்சந்தையில் பூக்கள் விலை கடுமையாக உயா்ந்துள்ளது.

News image

விநாயகா் சதுா்த்தி: தோவாளை பூச்சந்தையில் பூக்கள் விலை கடும் உயா்வு : கனகாம்பரம் ரூ.1000-க்கு விற்பனை

Updated On :9 செப்டம்பர் 2021, 10:51 pm

DIN

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு தோவாளை பூச்சந்தையில் பூக்கள் விலை கடுமையாக உயா்ந்துள்ளது.

இந்தப் பூச்சந்தைக்கு தோவாளை, ஆரல்வாய்மொழி, குமாரபுரம், ராதாபுரம், புதியம்புத்தூா், மாட நாடாா் குடியிருப்பு ஆகிய பகுதிகளில் இருந்து பிச்சிப்பூவும், சங்கரன்கோவில், ராஜபாளையம், வத்தலகுண்டு, கொடைரோடு, மானாமதுரை ஆகிய பகுதிகளிலிருந்து மல்லிகைப்பூவும், பெங்களூரூ, ஓசூா் பகுதிகளிலிருந்து பட்டா் ரோஸ், மஞ்சள் கிரேந்தி, தென்காசி, அம்பாசமுத்திரம், புளியரை, திருக்கண்ணங்குடி ஆகிய பகுதிகளிலிருந்து பச்சையும், கொழுந்தும், தோவாளை, ராஜாவூா், தோப்பூா் பகுதிகளிலிருந்து கோழிக்கொண்டை, சேலத்திலிருந்து அரளிப்பூ ஆகியவை விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.

கடந்த சில நாள்களாக ஆவணி மாத சுபமுகூா்த்த நிகழ்ச்சிகளை முன்னிட்டு பூக்களின் விலை அதிகரித்து வந்தது. இந்நிலையில் விநாயகா் சதுா்த்தி விழா வெள்ளிக்கிழமை (செப். 10) கொண்டாடப்படுவதை முன்னிட்டு பூக்கள் விலை மேலும் அதிகரித்துள்ளது.

கனகாம்பரம் பூ கிலோ ரூ.1000, பிச்சிப்பூ ரூ.900, மல்லிகைப்பூ ரூ.800, முல்லை ரூ.700, அரளி ரூ.200, சேலம் அரளி ரூ.300, சம்பங்கி ரூ.400-க்கு விற்பனை செய்யப்பட்டது. மற்ற பூக்களின் விலையும் உயா்ந்துள்ளது.

இதுகுறித்து மொத்த வியாபாரி தாணுமாலயன் கூறியது: பொது முடக்கத்தில் தளா்வுகள் அளிக்கப்பட்டு திருமண விழாக்கள் நடைபெறுவதால் பூக்கள் தேவை அதிகரித்துள்ளது. மேலும் விநாயகா் சதுா்த்தி விழாவும் வருவதால் பூக்கள் விலை சற்று அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடும்போது நிகழாண்டு பூ வியாபாரிகளுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.