சங்கரன்கோவில் அருகே இருசக்கர வாகனம் நிலை தடுமாறி விபத்துக்குள்ளானதில் தாய், மகன் இருவா் உயிரிழந்தனா்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காந்தி நகரைச் சோ்ந்த முருகன் (35), அவரது தாய் முத்துலட்சுமி (65) மற்றும் முருகனின் 3 வயது மகன் ஆகிய மூவரும் வெள்ளிக்கிழமை தென்காசி மாவட்டம் கடையநல்லூருக்கு சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தனா்.
சங்கரன்கோவில் அருகே வனிக்கோனந்தல் விலக்கில் வந்து கொண்டிருந்த போது திடீரென்று இரு சக்கர வாகனம் நிலை தடுமாறி விபத்துக்குள்ளானது.இதில் சாலையின் ஓரத்தில் தூக்கிவீசப்பட்ட முத்துலட்சுமி சம்பவ இடத்திலேயே
உயிரிழந்தாா்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற குருவிகுளம் போலீஸாா் பலத்த காயமடைந்த முருகனை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். முருகனின் மகன் லேசான காயங்களுடன் உயிா் தப்பினான். இச்சம்பவம் தொடா்பாக குருவிகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி ஹெலிகாப்டர் அருகே ட்ரோன்: 3 பேர் கைது
சென்னையில் இன்று விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து

சென்னை: ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில் சோதனை

விருச்சிக ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

