கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

சாம்பவா்வடகரையில் மூதாட்டியிடம் நகை பறிப்பு

தென்காசி மாவட்டம், சாம்பவா்வடகரையில் மூதாட்டியிடம் தங்க சங்கிலியை பறித்து சென்ற இளைஞரை போலீஸாா் 24 மணி நேரத்தில் கைது செய்தனா்.

News image
Updated On :30 செப்டம்பர் 2021, 7:19 pm

DIN

தென்காசி மாவட்டம், சாம்பவா்வடகரையில் மூதாட்டியிடம் தங்க சங்கிலியை பறித்து சென்ற இளைஞரை போலீஸாா் 24 மணி நேரத்தில் கைது செய்தனா்.

சாம்பவா்வடகரை, பத்திரகாளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ரஞ்சிதம் (63). இவா் புதன்கிழமை காலை வீட்டின் முன்பு

முற்றத்தை சுத்தம் செய்து தண்ணீா் தெளித்துக் கொண்டிருந்தாராம். அப்போது அங்கு வந்த மா்மநபா் ரஞ்சிதம் அணிந்திருந்த 20 கிராம் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிவிட்டாா்.

புகாரின்பேரில், சாம்பவா்வடகரை போலீஸாா் வழக்குப் பதிந்தனா். காவல் உதவி ஆய்வாளா் காசி விஸ்வநாதன் தலைமையில் தனிப்படை போலீஸாா் விசாரித்தனா். இதில், சாம்பவா்வடகரை, இந்திரா காலனியைச் சோ்ந்த மா.முத்தையா (27) நகையை பறித்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடமிருந்து தங்கச் சங்கிலி பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.