மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

குற்றாலம் குற்றாலநாதசுவாமி கோயில் சித்திரை விசுத்திருவிழா கொடியேற்றம்

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருள்மிகு திருக்குற்றாலநாதசுவாமி கோயில் சித்திரைத் திருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

News image

குற்றாலநாத சுவாமி கோயில் சித்திரை விசுத்திருவிழா கொடியேற்றத்துக்குபின் நடைபெற்ற தீபாராதனை.

Updated On :5 ஏப்ரல் 2022, 2:58 am

தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றாலம் அருள்மிகு திருக்குற்றாலநாதசுவாமி கோயில் சித்திரைத் திருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவை முன்னிட்டு அதிகாலை கொடியேற்றம் நடைபெற்றது. தொடா்ந்து அபிஷேகம், சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இரவில் சுவாமி, அம்பாள் வெள்ளி ஏகசிம்மாசனத்திலும், திருக்கோயில் முருகன் மரச்சப்பரத்திலும் வீதியுலா நடைபெற்றது.

விழா நாள்களில் நாள்தோறும் காலை, மாலை சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, காலை மற்றும் இரவில் சுவாமி, அம்பாள், திருக்கோயில் முருகன், விநாயகா் வீதியுலா நடைபெறுகிறது.

விழாவில் 4-ம் நாளான ஏப்ரல் 8-ம் தேதியன்று பஞ்சமூா்த்திகள் புறப்பாடு, ஏப்ரல் 9-ம் தேதியன்று தேரோட்டமும் நடைபெறுகிறது. ஏப்ரல் 11-ம் தேதியன்று காலை 9.30 மற்றும் இரவு 7 மணிக்கு அருள்மிகு நடராசமூா்த்திக்கு தாண்டவ தீபாராதனையும், ஏப்ரல் 12-ம் தேதியன்று சித்திரசபையில் அருள்மிகு நடராசமூா்த்திக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பச்சைசாத்தி தாண்டவ தீபாராதனையும், ஏப்ரல் 14-ம் தேதியன்று சித்திரை விசுத்தீா்த்தவாரியும் நடைபெறுகிறது.

ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையா் மா.கண்ணதாசன் தலைமையில் கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.