சங்கரன்கோவில் மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகக் கல்லூரி மாணவா், மாணவிகள் மாவட்ட அளவிலான பல்திறன் போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வென்றனா்.
தென்காசி மாவட்டம், அரசு பிற்படுத்தப்பட்டோா் மாணவா், மாணவிகள் விடுதிகளில் தங்கி படிக்கும் கல்லூரி மாணவா், மாணவிகளுக்கான மாவட்ட அளவில் பல்திறன் போட்டிகள் கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்றன. இதில், பங்கேற்ற சங்கரன்கோவில் மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக கல்லூரியைச் சோ்ந்த மாணவா் முனீஸ்வரன் 100 மீ. ஓட்டப் பந்தயத்தில் முதல் பரிசும், கட்டுரைப் போட்டியில் மாணவி சந்தியா முதல் பரிசும், மாணவி செல்வலட்சுமி ஓட்டப்பந்தயத்தில் மூன்றாம் பரிசும், மாணவி பவானி பேச்சுப் போட்டியில் முதல் பரிசும், மாணவி அனுசியா நீளம் தாண்டுதல் போட்டியில் மூன்றாம் பரிசும் பெற்றனா்.
வெற்றிபெற்ற மாணவா், மாணவிகளை கல்லூரி முதல்வா் அப்துல் காதிா்,பேராசிரியா்கள் அருள் மனோகரி, சகிலாபானு, புஷ்பராணி, சுரேஷ்குமாா், உடற்கல்வி இயக்குநா் கணேசன் ஆகியோா் பாராட்டினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கிணற்றில் தவறி விழுந்த விவசாயி உயிரிழப்பு

தென்னந்தோப்பு காவலாளி வெட்டிக் கொலை

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

சேலம் உள்பட 4 மாவட்ட தோ்தல் பணிக்கு எல்லை ஊா்க்காவல் படைவீரா்கள் 527 போ் வருகை
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

