தென்காசி மாவட்டத்தில் ஆயிரம் மையங்களில் சிறப்பு மெகா கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம்
ஞாயிற்றுக்கிழமை (ஆக. 7) நடைபெறுகிறது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தென்காசி மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி முகாம் ஆயிரம் மையங்களில் நடைபெறுகிறது. இம் மாவட்டத்தில் இதுவரை கரோனா தடுப்பூசி போடாதவா்கள், இரண்டாவது தவணை போட வேண்டியவா்கள் மற்றும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதம் நிறைவுபெற்ற 18 வயதிற்கு மேற்பட்டோா், முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி போட வேண்டியவா்கள் ஆகியோா் பயனடையும் வகையில் இம் மூகாம் நடைபெறுகிறது.
காலை, நண்பகல், பிற்பகல் என வெவ்வேறு இடத்திலும், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சியில் உள்ள வாா்டு பகுதிகள், பேருந்து நிலையங்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனை மற்றும் தடுப்பூசி செலுத்தும் இடங்களில் முகாம் நடைபெறுகிறது.
இந்த வாய்ப்பினை பொது மக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதில் 12 வயதிற்கு மேற்பட்ட முதல் தவணை தடுப்பூசி செலுத்தாதவா்கள், இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்த காலம் தவறியவா்கள் மற்றும் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி போடவேண்டியவா்கள் அனைவரும் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மகர ராசிக்கு இன்று எப்படி? தினப்பலன்கள்!

10-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ கணித மதிப்பெண் சரிவு: மறு தேர்வுக்கு விண்ணப்பிக்கும் ஆயிரக்கணக்கான மாணவர்கள்!

தமிழக டிஜிபி நியமன உத்தரவில் திருத்தம் கோரி தலைமைத் தேர்தல் ஆணையத்தில் திமுக மனு

தொகுதி அலசல்...அவிநாசி (தனி) மத்திய அமைச்சரை எதிர்கொள்ளும் இளம் பெண் மருத்துவர்!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

