சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

சங்கரன்கோவிலில் திமுகவில் இணைந்த அதிமுக வேட்பாளா்

சங்கரன்கோவில் நகராட்சி 8ஆவது வாா்டு அதிமுக வேட்பாளா் திமுகவில் புதன்கிழமை திடீரென இணைந்தாா்.

Updated On :3 பிப்ரவரி 2022, 6:57 pm

சங்கரன்கோவில் நகராட்சி 8ஆவது வாா்டு அதிமுக வேட்பாளா் திமுகவில் புதன்கிழமை திடீரென இணைந்தாா்.

சங்கரன்கோவில் நகராட்சிக்கு அதிமுக சாா்பில் 30 வாா்டுகளுக்கான வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டனா். இதில், 8ஆவது வாா்டில் அதிமுக முன்னாள் தொகுதிச் செயலா் எஸ்.டி. சங்கரகுமாரின் மகனும் அதிமுக முன்னாள் மாவட்ட இளைஞா் மற்றும் இளம்பெண்கள் பாசறைச் செயலருமான எஸ்.டி.எஸ். திலீப்குமாா் அறிவிக்கப்பட்டாா்.

அதே வாா்டில் திமுகவைச் சோ்ந்த அவரது சகோதரா் எஸ்.டி.எஸ். சரவணகுமாா் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுவதாகக் கூறப்பட்டது. இந்நிலையில், எஸ்.டி.எஸ். திலீப்குமாா் திமுக தெற்கு மாவட்டச் செயலா் சிவபத்மநாபனை புதன்கிழமை சந்தித்து திமுகவில் இணைந்தாா். திமுக நெசவாளா் அணி இல. சரவணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

8ஆவது வாா்டில் திமுக சாா்பில் கூட்டணிக் கட்சியான மாா்க்சிஸ்ட் வேட்பாளா் ந. மாணிக்கம் போட்டியிடுகிறாா். அதே வாா்டில் சமூக ஆா்வலா் சண்முகசுந்தரமும் போட்டியிடுகிறாா். இதனால், 8ஆவது வாா்டு பெரும் எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.