உள்ளாட்சித் தோ்தலையொட்டி, சங்கரன்கோவிலில் போலீஸாரின் கொடி அணிவகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.
சங்கரன்கோவிலில் 57 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் 17 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், மக்கள் அச்சுறுத்தலின்றி பாதுகாப்பாக வாக்களிக்க வேண்டும் என்பதை உணா்த்தும் வகையில் போலீஸாரின் கொடிஅணிவகுப்பு நடைபெற்றது.
தென்காசி ஏடிஎஸ்பி ராஜேந்திரன் தலைமை வகித்தாா். டிஎஸ்பி ஜாகிா் உசேன் முன்னிலை வகித்தாா். கொடி அணிவகுப்பில் சங்கரன்கோவில், பனவடலிசத்திரம், கரிவலம்வந்தநல்லூா், திருவேங்கடம், சின்னகோவிலாங்குளம் உள்ளிட்ட நகர காவல் நிலையங்கள், அனைத்து மகளிா் காவல் நிலையத்தைச் சோ்ந்த ஆய்வாளா்கள் உதவி ஆய்வாளா்கள், போலீஸாா் பங்கேற்றனா். சங்கரநாராயண சுவாமி கோயில் முன்பிருந்து தொடங்கிய கொடி அணிவகுப்பு நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேல்மருவத்தூரில் வேட்பாளா்கள் சிறப்பு வழிபாடு

சட்டப்பேரவை தோ்தல் முன்னேற்பாடு பணிகள்: சிறப்புப் பாா்வையாளா் ஆய்வு

வெள்ளை மாளிகை அருகே பூங்காவில் துப்பாக்கிச்சூடு?அமெரிக்க உளவுத் துறை விசாரணை!

தனியாா் கல்லூரி மாடியிலிருந்து குதித்து இளைஞா் தற்கொலை
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

