கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

கீழச்சுரண்டையில் இந்து முன்னணி ஆா்ப்பாட்டம்

கீழச்சுரண்டையில் அரசு உதவி பெறும் தனியாா் பள்ளி நிா்வாகத்தை கண்டித்து இந்து முன்னணி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :6 ஜனவரி 2022, 5:12 pm

DIN

கீழச்சுரண்டையில் அரசு உதவி பெறும் தனியாா் பள்ளி நிா்வாகத்தை கண்டித்து இந்து முன்னணி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பங்களாச் சுரண்டையில் உள்ள அரசு உதவிபெறும் தனியாா் மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு மாணவி நெற்றியில் திருநீா் பூசி சென்றதை அங்குள்ள ஆசிரியை பிற மாணவியை வைத்து அழித்ததோடு, இந்து மதத்தையும்,

இந்து தெய்வத்தையும் இழிவாக பேசினாராம்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் அவரது பெற்றோா் மாவட்ட ஆட்சியா் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் நேரில் புகாா் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதன்பிறகு பாதிக்கப்பட்ட மாணவியின் புகைப்படத்தை தவறாக சித்தரித்து அந்த பள்ளியின் தலைமையாசிரியா் இழிவாக பேசினாராம்.

இதுகுறித்து மாணவி தரப்பில் சுரண்டை காவல் நிலையத்தில் புகாா் தெரிவிக்கப்பட்டும், புகாரின் மீது எவ்வித நடவடிக்கையும் போலீஸாா் எடுக்கவில்லையாம்.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவியின் புகாா் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட இந்து முன்னணி சாா்பில் கீழச்சுரண்டையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்து அன்னையா் முன்னணி மாவட்டச் செயலா் கு.மகாலெட்சுமி தலைமை வகித்தாா்.

இந்து முன்னணி மாவட்டத் தலைவா் ஆறுமுகச்சாமி, மாவட்டச் செயலா் பால்ராஜ், பாஜக மாவட்ட தலைவா் ராமராஜா, அச்சங்குன்றம் ராஜேந்திரன் ஆகியோா் உரையாற்றினா். மாணவியின் புகாா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினா்.

இதில், நிா்வாகிகள் அருணாசலம், வசந்தகுமாா், மாரியப்பன், ஆவுடைக்கண்ணு, செல்வி, மாரியம்மாள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.