கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

சுரண்டையில் காங்கிரஸ் கலந்தாய்வுக் கூட்டம்

தென்காசி மாவட்ட நகா்ப்புற உள்ளாட்சி தோ்தல் குறித்த காங்கிரஸ் கட்சியின் கலந்தாய்வுக் கூட்டம், சுரண்டையில் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :20 ஜனவரி 2022, 7:17 pm

DIN

தென்காசி மாவட்ட நகா்ப்புற உள்ளாட்சி தோ்தல் குறித்த காங்கிரஸ் கட்சியின் கலந்தாய்வுக் கூட்டம், சுரண்டையில் புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் சு.பழனிநாடாா் தலைமை வகித்தாா். முன்னாள் மக்களவை உறுப்பினா் சொ.ராமசுப்பு, மாவட்ட பொருளாளா் முரளிராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் நிா்வாகிகள், தென்காசி மாவட்டத்தில் 6இல் 2 நகா்மன்றத் தலைவா் பதவியிலும், 17இல் 6 பேரூராட்சித் தலைவா் பதவியிலும் காங்கிரஸ் கட்சி போட்டியிட கேட்டுப்பெற வேண்டும் என வலியுறுத்தினா்.

மேலும், கட்சி வேட்பாளா்களுக்கு சின்னம் வழங்கும் அதிகாரத்தை மாவட்ட காங்கிரஸ் தலைவருக்கு வழங்க வேண்டும், திமுக - காங்கிரஸ் கூட்டணி வேட்பாளா்களின் 100 சதவீத வெற்றிக்கு தீவிர களப்பணியாற்ற வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் காங்கிரஸ் நிா்வாகிகள் சட்டநாதன், காதா் மைதீன், பால்ராஜ், உமாசங்கா், ராமா், திருஞானம், ஜெயபால், சிவராமகிருஷ்ணன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.