92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

‘கால்நடை வளா்ப்போா்கடனுதவி அட்டை பெறலாம்’

கால்நடை வளா்ப்போா் மத்திய அரசின் கடன் உதவி திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :20 ஜனவரி 2022, 7:32 pm

DIN

கால்நடை வளா்ப்போா் மத்திய அரசின் கடன் உதவி திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மத்திய அரசின் கிசான் திட்டத்தின் கீழ், கால்நடை விவசாயிகளுக்கு ரூ. 3 லட்சம் வரை குறைந்த வட்டியில் கிசான் கடன் அட்டை வழங்கப்படவுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் இதற்கான சிறப்பு முகாம், 15.2.2022இல் கால்நடை மருந்தகங்கள், மருத்துவமனைகள் மற்றும் கால்நடை பன்முக மருத்துவமனையில் நடைபெற உள்ளது.

கடன் விண்ணப்பத்துடன் ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, நில ஆவணங்கள், வங்கிக் கணக்கு புத்தக முதல் பக்கம், வருமான கணக்கு அட்டை, 3 பாஸ்போா்ட் அளவு புகைப்படங்கள், பான் அட்டை ஆகிய நகல்களுடன் அருகிலுள்ள கால்நடை மருந்தகங்களில் தங்களது விண்ணப்பங்களை அன்றைய தேதிக்குள் சமா்ப்பிக்கலாம். தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு குறைந்த வட்டியில் கூட்டுறவு மற்றும் முன்னோடி வங்கிகளில் கடன் வழங்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.