தென்காசி: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் கேபிள்கள் பேட்டரிக்கள் ஆகியவை நள்ளிரவில் மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
ஆலங்குளம்-அம்பாசமுத்திரம் சாலையில் பிஎஸ்என்எல் அலுவலகம் உள்ளது. இங்கு ஐந்து ஊழியர்கள் மட்டுமே பணிக்கு உள்ளனர். இரவு காவலாளி கிடையாது. சிசிடிவி கேமராவும் வைக்கப்படவில்லை. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறைக்கு பின்னர் இன்று காலை பணிக்கு வந்த ஊழியர்கள் அலுவலகத்தில் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உள்ளே சென்று பார்த்தபோது தகவல் தொடர்பு சாதனங்கள், கேபிள்கள் மற்றும் பேட்டரிக்கள் திருடு போயிருந்தது தெரியவந்தது. திருடர்கள் கேபிள்களை வெட்டி எடுத்துச் சென்றதால் ஆலங்குளம் மற்றும் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் தகவல் தொடர்பு சேவை, இணையதள சேவை துண்டிக்கப்பட்டுள்ளதால் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
ஊழியர்கள் அளித்த தகவலின் பெயரில் வந்த ஆலங்குளம் காவல் துறையினர் அலுவலகத்தில் ஆய்வு செய்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
இதே அலுவலகத்தில் கடந்த ஜூன் 28 ஆம் தேதியும், மாறாந்தை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் மே 28 ஆம் தேதியும் சில பொருட்கள் திருடு போனது. அப்போதே காவல் துறையினர் திருடர்களை கண்டுபிடித்திருந்தால் இந்த சம்பவம் நிகழ்ந்திருக்காது என பொதுமக்கள் கூறுகின்றனர்.
திருடு போன பொருட்களின் மொத்த மதிப்பு ரூபாய் 5 லட்சத்திற்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கார்த்திகை தீபம் தொடரில் பாண்டவர் இல்லம் நடிகை!

வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

ஹலோகிராமில் விஜய் உருவம்... தவெக வேட்பாளர் நூதன பிரசாரம்!

100% வாக்குப் பதிவு: கோவையில் இந்திய துணை தேர்தல் ஆணையர் ஆய்வுக் கூட்டம்
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


