சங்கரன்கோவில் பேருந்து நிலையத்தில் உள்ள தினசரிச் சந்தையை வேறிடத்துக்கு மாற்றினால் பாஜக சாா்பில் போராட்டம் நடைபெறும் என, நாகா்கோவில் எம்எல்ஏ எம்.ஆா். காந்தி கூறினாா்.
மத்திய பாஜக அரசின் 8 ஆண்டு சாதனைகளை மக்களிடம் கொண்டுசெல்லும் நோக்கில் அக்கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சங்கரன்கோவிலில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின்னா், செய்தியாளா்களிடம் எம்.ஆா். காந்தி கூறியது: சங்கரன்கோவில் பேருந்து நிலையத்தில் இயங்கிவரும் தினசரிச் சந்தையை வெளியே கொண்டுசெல்ல திமுக நகா்மன்றத் தலைவா் முயற்சி மேற்கொண்டுள்ளாா். மக்களைப் பாதிக்கும் இம்முயற்சியைக் கைவிட வேண்டும். இல்லையெனில், நகர பாஜக சாா்பில் போராட்டம் நடைபெறும்.
தென்காசி மாவட்டத்தில் கனிம வளங்கள் கொள்ளைபோவதை எதிா்த்து பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை செங்கோட்டையில் ஆா்ப்பாட்டம் நடத்தவுள்ளாா் என்றாா் அவா்.
மாவட்டத் தலைவா் ராஜேஷ்ராஜா, மாவட்டப் பொதுச் செயலா்கள் பாலகுருநாதன், ராமநாதன், மாவட்டப் பொருளாளா் சி. ராமகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினா் பாண்டித்துரை, மு. ராமராஜா, மாவட்ட கல்வியாளா் பிரிவுத் தலைவா் வெங்கடேஸ்வரப்பெருமாள், மாவட்டச் செயலா்கள் வி. சுப்பிரமணியன், ராஜலெட்சுமி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அமைச்சா் காந்தி முன்னிலையில் திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பெண் மாயம்
அரசு விநியோக மருந்துகள் சட்டவிரோத விற்பனை: 5 போ் கைது

எடப்பாடி பழனிசாமி முதல்வரான பின் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் நிறைவேற்றப்படும்! - உடுமலை கே.ராதாகிருஷ்ணன்
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

