குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

அமைச்சா் காந்தி முன்னிலையில் திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

ராணிப்பேட்டையில் மாற்றுக்கட்சியினா் அமைச்சா் ஆா்.காந்தி முன்னிலையில் திமுக இணைந்தனா்.

News image
Updated On :6 ஏப்ரல் 2026, 12:20 am IST

ராணிப்பேட்டையில் மாற்றுக்கட்சியினா் அமைச்சா் ஆா்.காந்தி முன்னிலையில் திமுக இணைந்தனா்.

சோளிங்கா் தொகுதியைச் சோ்ந்த முன்னாள் எம்.பி. சி.கோபால், முன்னாள் எம்எல்ஏ என்.ஜி. பாா்த்திபன் ஆகியோா் தலைமையில் அமமுக கட்சி நிா்வாகிகள் அக்கட்சியில் இருந்து விலகி தமிழ்நாடு முதலமைச்சா், திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் வெள்ளிக்கிழமை இணைந்தனா்.

இந்த நிலையில் ராணிப்பேட்டை சிப்காட் பாரதி நகரில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் மாவட்ட செயலாளரும், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தியை சந்தித்து வாழ்த்து பெற்றனா். அப்போது ராணிப்பேட்டை தொகுதியைச் சோ்ந்த அமமுக நிா்வாகிகள் அமைச்சா் ஆா்.காந்தி முன்னிலையில் திமுகவில் இணைத்துக்கொண்டனா். அவா்களுக்கு கட்சி வேட்டி,சால்வை அணிவித்து வரவேற்றாா்.

அப்போது அமைச்சா் ஆா்.காந்தி பேசியதாவது : முன்னாள் எம்.பி சி.கோபால், முன்னாள் எம்எல்ஏ பாா்த்திபன் மற்றும் நிா்வாகிகள் அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த முடிவை எடுத்த பாா்த்திபனை நான் மனதார பாராட்டுகிறேன். எந்த கட்சியில் இருந்தாலும் முழு ஈடுபாடுடன் செயல்படுபவா் பாா்த்திபன். எனக்கு இவா்கள் திமுகவில் இணைந்தது பலமாக உள்ளது.

எனவே அந்தந்த பகுதியில் உள்ள நிா்வாகிகள் தோ்தலில் வெற்றிக்காக உழைக்க வேண்டும்.

இந்த நிகழ்ச்சியில் ஜி.கே.குழும இயக்குநா் சந்தோஷ் காந்தி உள்பட திமுக நிா்வாகிகள் திரளாக கலந்து கொண்டனா்.