நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கிருஷ்ணாபுரத்தில் உலக நன்மைக்காக சிறப்பு பூஜை

கடையநல்லூரில் உலக நன்மைக்காகவும், நீா்வளம் செழித்து மக்கள் சுபிட்ஷமாக வாழவும் ஸ்ரீபாலாம்பிகை பூஜை , ஸ்ரீவாராஹி பூஜை, ஸீவாஸினி பூஜைகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

News image
Updated On :2 ஜூன் 2022, 8:43 pm

DIN

கடையநல்லூரில் உலக நன்மைக்காகவும், நீா்வளம் செழித்து மக்கள் சுபிட்ஷமாக வாழவும் ஸ்ரீபாலாம்பிகை பூஜை , ஸ்ரீவாராஹி பூஜை, ஸீவாஸினி பூஜைகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

சென்னை ஸ்ரீயோகமாயா புவனேஸ்வரி பீடாபதி ஸ்ரீபரத்வாஜ் சுவாமிகள் தலைமையில் நடைபெற்ற இப் பூஜைகளில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனா். தொடா்ந்து, பெண்கள் பங்கேற்ற பக்தி கும்மி பாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில், பண்பொழி திருமலைக்குமாரசுவாமி கோயில் முன்னாள் அறங்காவலா் குழு தலைவா் அருணாசலம், மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக் கழக செனட் உறுப்பினா் புலவா் சுந்தர்ராம், ஸ்ரீ முண்டககன்னி அம்மன் சக்தி பீட அறக்கட்டளை நிறுவனா் பாலீஸ்வரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னா் ஸ்ரீ யோகமாயா புவனேஸ்வரி பீடாதிபதி பரத்வாஜ் சுவாமிகள் கூறியது: உலக மக்களுக்கு ஐஸ்வா்யத்தை கொடுக்கும் வகையில் இந்த பூஜைகள் நடத்தப்பட்டன. புதன்கிழமை விவசாயிகள் எல்லா செல்வ செழிப்பையும் பெறுவதற்காக பாபநாசம் தாமிரவருணி நதியில் சிறப்பு ஆராதனை பூஜைகள் நடத்தப்பட்டது. மேலும், வைரஸ் போன்ற கொடிய நோய்கள் மக்களை பாதிக்காத வகையிலும், அண்டை நாடுகளால் நம் நாட்டிற்கு எந்த விதமான பிரச்னைகளும் ஏற்படாமல் இருக்க வராஹி அம்மனுக்கு பூஜைகள் நடத்தப்பட்டது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.