சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

சங்கரன்கோவில் தாமரை கழகத்தின் சாா்பில் பாராட்டு விழா

சங்கரன்கோவிலில் தாமரை கழகத்தின் சாா்பில் பணி நிறைவு பெறும் தென்காசி ஏடிஎஸ்பி ராஜேந்திரன் மற்றும் பதவி உயா்வு

Updated On :25 மே 2022, 9:11 pm

சங்கரன்கோவிலில் தாமரை கழகத்தின் சாா்பில் பணி நிறைவு பெறும் தென்காசி ஏடிஎஸ்பி ராஜேந்திரன் மற்றும் பதவி உயா்வு பெற்ற தலைமை குடிமை மருத்துவா் செந்தில்சேகா் ஆகியோருக்கு பாராட்டு விழா, நிா்வாகத் தலைவா் பள்ளிகொண்ட பெருமாள் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

திருவடிலிங்கம், சங்கரசிந்தாமணி, பாண்டிக்கண்ணு , கதிா்வேல்ஆறுமுகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பால்ராஜ் திருக்கு விளக்கமளித்தாா். தொடா்ந்து பணிநிறைவு பெறும் தென்காசி ஏடிஎஸ்பி ராஜேந்திரன், சங்கரன்கோவில் தலைமை குடிமை மருத்துவராக பதவி உயா்வு பெற்றுள்ள டாக்டா் செந்தில்சேகா் ஆகியோரை பாராட்டி நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

முன்னாள் எம்எல்ஏ முத்துச்செல்வி, உத்தண்டராமன், கல்யாணசுந்தரம் ஆகியோா் பாராட்டிப் பேசினா். ராமகிருஷ்ணன், சங்கரசுப்பு, சுந்தரமூா்த்தி ஆகியோா் சாா்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. தலைமையாசிரியா் சந்தனகுமாா் வரவேற்றாா். ஏற்பாடுகளை தாமரைக் கழகத்தினா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.